சென்னை

தீபாவளிக்கான ரயில் டிக்கட்டுகள் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை ஆகி உள்ளன.

ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக ரயில்களில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அதாவது அக்டோபர் மாதம் 29-ந் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்றுரெயில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட்டுகள் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தன.

கன்னியாகுமரி, நிஜாமுதீன், அனந்தபுரி, திருச்செந்தூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. பயணிகள் பெரும்பாலும் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அக்டோபர் 29-ந் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும், அக்டோபர் 30-ந் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.