சென்னை: கொரோனா காரணமாக வரும் 31ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக் கடைகள், பார்களையும் மூடவேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அமைந்துள்ளன.

அவை சுகாதாரமற்ற முறையில் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. ஆகவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

[youtube-feed feed=1]