டெல்லி

காகும்பமேளாவுக்கு வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, நடக்கும் மகாகும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்கி 45 நாட்கள் நடக்கிறது. நேற்று உத்தரபிரதேச மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார்.

அப்போது சுரேஷ் கன்னா-

”மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. டெல்லி முதல்-மந்திரி அதிஷியையும் சந்தித்து அழைப்பு விடுப்போம்.

மகாகும்பமேளாவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தொலைந்துபோன பக்தர்களை கண்டுபிடித்து மீட்க பல மொழிகள் கொண்ட கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 101 ஸ்மார்ட் வாகன நிறுத்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தினந்தோறும் 5 லட்சம் வாகனங்களை நிறுத்த முடியும்.”

எனத் தெரிவித்துள்ளர்.