புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளும் காவல்துறை கட்டுப்பாட்டுடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று கல்வித்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கு ஆய்வுகள் மேற்கொண்டார்.

தொடர்ந்து கல்வித்துறை இயக்குநர், இணை இயக்குநர் உள்பட அதிகாரிகளை அழைத்து, ஊழியர்களின் பணி, கோப்புகளின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கேட்ட றிந்தார். மேலும்,  பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஆய்வு விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தரத்தை உடனடியாக ஆய்வு செய்ய முடியுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து பள்ளிகள் மாணவ மாணவிகளை அழைத்து வர உபயோகப்படுத்தும் பேருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி,  பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகள் அனைத்தும் வயர்லெஸ் மூலம் உடனடியாக போக்குவரத்து மற்றும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையின்கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.