சென்னை,

திமுக அமைச்சர்கள் ஒருசில் டிடிவி எதிராக போர்க்கொடி தூக்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் டிடிவி.

அதைத்தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் தன்னுடனேயே இருக்கிறார்கள் என்று கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துறை அதிகாரிகளின் வீடுகளில் நடைபெற்ற அதிரடி ரெய்டுகள் மற்றும் விசாரணை காரணமாக தமிழக அமைச்சர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

சசிகலா அணியை ஆதரிப்பதால்தான் பிரச்சினைகள் தொடர்கின்றன என்று ஒருவருக்கொருவர் பேசத்தொடங்கி விட்டனர். சசிகலா குடும்பத்தினரை நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியுடன் இணைந்து அதிமுகவை மீட்டெடுக்க முடிவு செய்ததாக தகவல்கள் பரவியது.

அதுபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்த தாகவும், ஆனால், அவர், தன்னை பதவியில் இருந்து நீக்கினால் பல பிரச்சினைகளை அனைவரும் சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, ஓபிஎஸ் அணியுடன் இணைய ஒருசில அமைச்சர்கள் மற்றும் கிட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக பரபரப்பு நிலவி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிடிவி தினகரன் இன்று காலை முதலே அதிமுக எம்.பியான தம்பித்துரையிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

அ.தி.மு.க நிர்வாகிகள் தனக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவே வந்திருப்பதாக முதலில் கூறினார். பின்னர்  20 பேர் கூடி பேசிக் கொண்டிருந்த போது சில விவகாரங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,   அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் தான் இருப்பதாகவும், யாரோ வதந்திகளை பரப்பி வருவதாகவும்,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும்,

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளானதற்காக அமைச்சர் பதவியில் இருந்து விஜய பாஸ்கரை நீக்குவது நியாயம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.