காசா-வில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்காவிட்டால் நரக வேதனையை இனி தான் அனுபவிக்க நேரிடும் என்று ஹமாஸை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பிப்ரவரி 15 அன்று நண்பகலுக்குள் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியும் விடுவிக்கப்படாவிட்டால், போர்நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியதாகவும் தாக்குதலை மீண்டும் துவங்கியிருப்பதாகவும் ஹமாஸ் குற்றசாட்டியுள்ளது.

இதனால் “அடுத்த சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த அடுத்த பணயக்கைதிகள் விடுதலை, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும்” என்று ஹமாஸ் கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு எதிரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியும் சில நாட்களுக்குள் காசாவிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால் “எல்லா நரகங்களும்” தளர்ந்து போகும்” என்று நேற்று எச்சரித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் – இது ஒரு பொருத்தமான நேரம் என்று நான் நினைக்கிறேன் – அதை ரத்து செய்யச் சொல்வேன், அனைத்து பந்தயங்களும் முடிந்துவிட்டன, நரகம் வெடிக்கட்டும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஹமாஸ் மீதான அமெரிக்க அதிபரின் இந்த அறைகூவல் உலகை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.