டெல்லி:

டிசம்பர் 3ந்தேதி முதல் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜியோவின் வருகை காரணமாக, அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் பலத்த நஷ்டத்தை அடைந்தனர். சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 3ந்தேதி முதல் வோடாபோன் ஐடியா, ஏர்டெல்  பொன்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள்  சந்ததாதாரர் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

அதன்படி, வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை 20 முதல் 42 சதவீதம் வரை 3ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

ஜியோவும் 6ம் தேதி முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.