மும்பை :

70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடி சென்று வங்கி சேவைகளை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”வயது முதிர்நதவர்கள் வங்கிச் சென்று சேவை பெற சிரமப்படுகின்றனர். பல சமயங்களில், மூத்த குடிமக்களை வங்கிக் கிளைகள் புறக்கணிப்பதும் நடக்கிறது.

‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கவும், ஏ.டி.எம்., பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம்.

ஆகவே , அனைத்து வங்கிகளும், 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடிச் சென்று வங்கி சேவை அளிக்க வேண்டும்.

அவர்களுக்கு, பணம் டிபாசிட் செய்வது, பணம் எடுப்பது, காசோலை புத்தகங்கள் வழங்குவது, வரைவோலை சேவைகளை அளிக்க வேண்டும். மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட தேவைகளுக்கு அவசியமான, வாழ்நாள் சான்றுகளை, அவர்களின் வீட்டிலேயே சென்று பெற வேண்டும். மூத்த குடிமக்களுக்கு என, வங்கிக் கிளைகளில் தனி பிரிவை ஏற்படுத்தி, சேவை அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை, வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.