பூரி
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 வாயில்ககளும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன.
ஒடிசாவின் பூரி நகரில் உள்ளபுகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு கொரோனா தொற்றுக்கு முன்பு வரை கோவிலின் 4 நுழைவாயில்கள் வழியாகவும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பிறகு கொரோனா காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டு கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்ட பிறகு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் கோவிலின் சிங்க வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு மற்ற 3 வாயில்களும் மூடப்பட்டன.
எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்ட்டு கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஒடிசா சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 நுழைவாயில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்ற நிலையில் நேற்று முன்தினம் ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். அவரது தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 வாயில்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று முதல்வர் மோகன் சரண் மாஜி, 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள், பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று அதிகாலை புரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்று அவர்களின் முன்னிலையில் கோவிலின் 4 நுழைவாயில் கதவுகளும் திறக்கப்பட்டன. இதன்மூலம் பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.