திகைலாஷ்

த்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று உத்தரகாண்ட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களையும் பார்வையிட்டனர். கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஆதில், 30 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் ஆதி கைலாஷில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பயண வழியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை மீண்டும் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்து வந்தனர்.

யாத்திரிகர்கள் சிதம்பரத்தில் உள்ள உறவினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்ததையடுத்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதி கைலாஷிலிருந்து யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நிலச்சரிவு சிக்கிய தமிழர்களை மீட்கும் பணி துவங்கி 30 தமிழர்கலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.