ன்னோஜ்

நேற்று கன்னோஜில் புதியதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் இடிந்ததால் அதில் சிக்கிய 28 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கன்னாஜ் ரயில் நிலையத்தில் நடந்து வரும் புதிய முனையத்துக்கான கட்டுமானப்பணிகளில் கட்டிடம் ஒன்றுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு கூரைக்காக கான்கிரீட் போடும் பணிகள் நேற்று நடந்தது. கான்கிரீட் கலவை கொட்டியதும் பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்ததால் உடனே அங்கிருந்து பயங்கர புழுதி கிளம்பியது.  இதனால் அங்கே நின்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆயினும் அங்கே பணியில் இருந்த தொழிலாளர்களும் கீழே விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இவர்களில்ல் பலருக்கு காயம் ஏற்பட்டதால்ல் அதிர்ச்சியடைந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த தகவல் அறிந்து தேசிய மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கே விரைந்து சென்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. இடிபாடுகளில் சிக்கியவர்வர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. நேற்ரி இரவு முழுவதும் 16 மணிநேரம் நீடித்த மீட்பு பணியால், இடிபாடுகளில் சிக்கிய 28 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.