கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆலியா பட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். முன்னதாக அவரும் கொரோனாவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை காலை, மும்பை விமான நிலையத்தில் இந்த ஜோடி கேமரா கண்ணில் பட்டது.

இருவரும் வெள்ளை நிற உடையில் காட்சியளித்தனர். ’மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் போது, நீங்கள் விடுமுறையை கழிக்கச் செல்கிறீர்களா’ என ஆலியா – ரன்பீரின் மாலத்தீவு பயணம் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.