டில்லி.

நாட்டில் தங்கம் விலை தினசரி மாறி வருவதுபோல பெட்ரோல் விலையிலும் தினசரி மாற்றம் செய்ய பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஏற்கனவே பரிசார்த்த மே 1ந்தேதி முதல்  முறையில்  புதுச்சேரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்பூர் (ராஜஸ்தான்), ஜாம்ட்ஷெட் பூர் (ஜார்க்கண்ட்), சண்டிகர் ( அரியானா) ஆகிய ஐந்து நகரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் தினசரி மாற்றம் செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 16ந் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த புதிய நடைமுறை நாடு முழுவதும் வரும் 16ம் தேதி (ஜூன் 16) முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள்  ஜூன் 16 முதல் தினசரி விலை நிர்ணய முறையை அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகினற்ன.