சிட்னி: பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று கடுமையாக சாடியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.

ஆலன் பார்டர் கூறியுள்ளதாவது, “நான் பார்த்த கிரிக்கெட்டிலேயே, இதுவொரு மந்தமான செயல்பாடு. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதில், பல இளைஞர்கள் தங்களின் எதிர்கால வாய்ப்புக்காக விளையாடுகிறார்கள்.

ஆனால், பயிற்சி போட்டியில், பீல்டிங் செயல்பாடு, பெளலிங் செயல்பாடு மற்றும் கேப்டன்சி செயல்பாடு ஆகிய அனைத்தும் மிகவும் மோசமாக இருந்தது.

கிரிக்கெட்டில் சரிவு என்பது உண்டுதான். ஆனால், போராட்டம் என்பது முக்கியம். நான் குறைசொல்ல வேண்டுமென்பதற்காக பேசவில்லை. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் நீங்கள் செயல்பட்ட விதம் உண்மையிலேயே மோசமானது” என்றுள்ளர் ஆலன் பார்டர்.

கடந்த 1987ம் ஆண்டு, இவர் தலைமையில்தான், ஆஸ்திரேலிய அணி முதன்முதலாக ஒருநாள் உலகக்கோப்ப‍ையை வென்றது.

 

[youtube-feed feed=1]