அட்சய திருதியை ஸ்பெஷல்
நாளை 26.4.20ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை ஆகும்.

அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் என்றும் உடனடி தேவை என்பது தண்ணீர். கடந்த வருடம் நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம்.
எனவே அக்ஷய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறையத் தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்குக் குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்கப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது சரியான முறை என்று நினைத்தால்…… தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் பிரார்த்தனை செய்யச் சொல்லவும்.
நீரின்றி அமையாது உலகு !
Patrikai.com official YouTube Channel