க்னோ

மீண்டும்  வாக்கு சீட்டு தேர்தல் முறையை  கொண்டு வர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

ஜெர்மனியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல்குமார் கம்போஜ் என்பவர்   எம்பி ஆக உள்ளார்.  இவர் நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். பிறகு கம்போஜுடன் இணைந்து, அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம்,

”ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் என்றால் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் நம்பவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கூட மனச்சோர்வுடன்தான் இருக்கின்றனர். அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. எனவே, வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.”

என்று வலியுறுத்தி உள்ளார்..