படான்
மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அகிலேஷ் யாதவ் தனது பிரசாரத்தின் போது,
“வரும் மே 7-ந்தேதி நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பாஜகவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர். அவர்கள் இந்த தேர்தலில் முழுமையாக துடைத்து எறியப்படுவர். எற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் மக்கள் பாஜகவை கவிழ்த்து. மூன்றாவது கட்டத்தில் இவர்களை துடைத்தெறியப் போகிறார்கள்
அவர்கள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இன்று விவசாயிகள் தங்கள் வருவாயை கணக்கிட்டால், கவலையே மிஞ்சும். ஏனென்றால் விலைவாசி உயர்வால் உற்பத்திக்கு தகுந்த வருவாயை ஈட்ட முடியவில்லை. விவசாய உற்பத்திக்கான செலவை அரசும் வழங்கவில்லை’
பஜக அனைத்து பிரிவினருக்கும் பா.ஜனதா போலி வாக்குறுதி அளித்தூள்ளது. பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகவே மாறி உள்ளது. எனவே ஆத்திரமடைந்த மக்கள் பாஜகவை தூக்கி வீசுவது உறுதி”
என்று தெரிவித்தார்.