மாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளை அகிலேஷ் யாதவ் முடக்கிவிட்டார். இதையடுத்து அவருக்கும், முலாயமுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இக் கட்சியின் தலைவர் முலாயம். இவரது மகன், அகிலேஷ் முதல்வர்.

இருவருக்குமிடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வந்தது. இது சமீபத்தில் வெடித்தது.  அகிலேஷை கட்சியைவிட்டு நீக்கினார் முலாயம். மேலும், கட்சியில் பிளவு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டினர். கட்சி சின்னமான சைக்கிள், தங்களுக்கே சொந்தம் என சொல்லிவருகிறார்கள்.

இடையில் சிலர் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கும்படி வங்கிகளுக்கு அகிலேஷ் முறையிட்டார். இதையடுத்து அக் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் 500 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

யாதவ் முடக்கி வைத்துள்ளார். வழக்கமாக சிவபால் யாதவ் கையெழுத்துடன் அந்த கணக்குகள் இயங்கி வந்தன. அகிலேஷ் யாதவ் முறையிட்டதன் பேரில், சமாஜ்வாதிக் கட்சியின் கணக்குகளை பயன்படுத்த முடியாதவாறு வங்கிகள் முடக்கி வைத்துள்ளன.