உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
“இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்” என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும். “உ.பி. தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும்” என தெரிவித்துள்ளார்.
“எனினும் சின்ன கட்சிகளுக்கு எங்கள் கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்க தயாராக உள்ளோம். அவர்களுக்கு எங்கள் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.
உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவபால், “பிரகதிஷீல் சமாஜ்வாதி” என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
“அவரது கட்சிக்கு சமாஜ்வாதி கூட்டணியில் இடம் உண்டா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அகிலேஷ் யாதவ் “சிவபால் யாதவ் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் நிற்க மாட்டோம் என ஏற்கனவே சொல்லி விட்டேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்” என பதில் அளித்தார்.
– பா. பாரதி