சந்திப்பூர்: ஆளில்லா விமானங்களை அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ மகிழ்ச்சி தெரிவித்துஉள்ளது.
ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ப்ரைம் ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வந்தது. இந்த ஏவுகணையின் சோதனை நேற்று நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.
உலக முழுவதும் ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அதுபோல,இந்தியாவிலும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகனையை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி வந்தது. தரையிலிருந்து ஏவப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைக்கு ஆகாஷ் ப்ரைம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் ஆளில்லா வான் இலக்கை தாக்கும் சோதனை நடவடிக்கை ஒடிசாவில் சந்திப்பூரில் நேற்றுநடத்தப்பட்டது.
அப்போது வானத்தில் உள்ள ஆளில்லாத டிரோன் இலக்கை ஆகாஷ்பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.