பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

mnbb

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இஷா அம்பானி – ஆனந்த் பிராமலின் பிரம்மாண்டத் திருமணத்தைத் தொடர்ந்து, இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியும், வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர்.

நண்பர்களாக இருந்து வந்த இவர்களை மணவாழ்க்கை மூலம் இணை இருவீட்டாரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி இவர்களது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகினான. இந்நிலையில் ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தாவின் திருமண அழைப்பிதழ் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமண அழைப்பிதழ் அழகிய இளஞ்சிவப்பு நிறப் பெட்டிக்குள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேல்புறத்தில் சூரிய ஒளியில் தாமரைகள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் இருக்கின்றனர். அதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் வெள்ளி ஃப்ரேமில் ராதா கிருஷ்ண படம் வைக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் கார்டு ஒன்று மணமக்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் இருக்கிறது. இதில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ரதத்தில் வெண்ணிற விநாயகரின் உருவம் வைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினரின் திருமண அழைப்பு உள்ளது. திருமண அழைப்பிதழ் பெட்டகத்தின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழை நேற்று முன் தினம் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலில் நீதா அம்பானி வைத்து ஆசிபெற்றார். அதைத் தொடர்ந்து பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஆடம்பரமாக உள்ள இந்த திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

[youtube-feed feed=1]