எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் #AK61.
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதனை அடுத்து, ஐரோப்பா மற்றும் இமயமலையில் பைக் சவாரி செய்து வருகிறார் அஜித்.
இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனே-வில் நடைபெற இருப்பதாகவும், இல்லை பாங்காக்-கில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்.
பைக் பயணம் முடிந்ததும், படத்தின் டப்பிங் வேலையில் அஜித் தீவிரமாக ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
#AK61 Title + First Look Release In Few Days.. 😊
— Magizh Thirumeni (@MagizhDirector) September 19, 2022
தவிர, தீபாவளிக்கு விஜய் நடிக்கும் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபீசில் மோத இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
#AK61 குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வரும் நிலையில், இந்தப் படத்திற்கு துணிவே துணை என்று பெயர்வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மற்றொரு செய்தி வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் எச். வினோத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.