சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சென்னை மாநகர காவல்ஆணையாளர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதன் தமிழ்நாடு அரசு போலீஸ் வீட்டு வசதியத்துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். கடலோர பாதுகாப்புக்கு சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டு உள்ளார்.
- தீயணைப்புத்துறை டி.ஜி.பி-யாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி-யாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி-யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி-யாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.