சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.இராஜன் குழு அளித்த அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி தமிழகஅரசுக்கு அறிக்கை அளித்தனர். அதை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு அறிக்கை, தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, இந்தி என 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.