சென்னை

நேற்றுடன் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தை அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி படம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்  வெளியாகிறது. இந்த விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது.

படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு சமீபட்தில் வெளியிட்டிருந்தது.

நேற்றுடன் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. நடிகர் அஜித் உள்பட படக்குழுவினர் அதில் இடம் பெற்றுள்ளனர்.