நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திட்டம் இரண்டு’ புதிய படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி உள்ளது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.