மும்பை: அமிதாப் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். எனது குடும்பத்தார், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
10 நாட்களாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா பச்சன் அவர்களது பரிசோதனை முடிவுகளும் தற்போதும் வெளியாகி உள்ளது. அதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.