புதுடெல்லி:
னாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த ஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத்துறை 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமாக பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் 2004ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு பணம் அனுப்பியதற்கு விளக்கம் அளிக்குமாறு பச்சன் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அமலாக்க இயக்குனர் அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி , 2004ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அமிக் பார்ட்னர்ஸ் என்ற ஆஃப்ஷோர் நிறுவனத்தில் ஐஸ்வர்யா ராய் இயக்குநராக இணைக்கப்பட்டதாகவும், சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா இந்த நிறுவனத்தை பதிவுசெய்தது எனவும், இது 50,000 டாலர் மூலதனத்தைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.நடிகர் 2009இல் ஐஸ்வர்யாராய் நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், துபாயைச் சேர்ந்த BKR டோனிஸ் நிறுவனத்தால் அது வாங்கப்பட்டது.

இந்நிலையில், பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். ஐஸ்வர்யா ராய் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை திரட்ட முடிவு செய்துள்ளார் மேலும் அடுத்த கட்ட விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் ஆஜராக வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த ஐஸ்வர்யா ராயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால்யாரிடமும் பேசாமல் ஐஸ்வர்யா ராய் உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.