இந்தியாவில் முதன்முதலில் 4 தலைமுறை இணையம் எனப்படும் அதிவேக 4 ஜி இணைய சேவையை ஜியோ ஆரம்பித்தபின்னர் இந்திய தொலைத்தொடர்பு துறை புது வேகம் பெற்றது. அவ்வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் இணையப் பயன்பாட்டில் ஜியோ அளித்த மறுமலர்ச்சி இணைய பயனாளர்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. சீனாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தங்களுடைய 3ஜி சேவையை நிறுத்த உள்ளது. 3ஜிக்காக வழங்கப்ட்ட 900 MHz அலைக்கற்றையை 4ஜி மறுசீரமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொல்கொத்தா முழுதும் 4ஜி இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் நாடு முழுதும் 22 தொலை தொடர்பு வட்டாரங்களில் 3ஜி சேவையை 4ஜி சேவையாக மாற்றிட மறுசீரமைப்பு பணிகளை செய்த உள்ளதாகவும், 2ஜி சேவையை தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது
=செல்வமுரளி