டெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்களுல் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையிலும், ஓராண்டுக்கு Perplexity Pro AI சந்தாவை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, 360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro AI இலவசமாக வழங்க உள்ளது.
அதன்படி, ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள், வைஃபை பயன்படுத்துபவர்கள், டிடிஎச் வாடிக்கையாளர்கள் என அனைவருமே அடுத்த 12 மாதத்திற்கு இலவசமாக Perplexity Pro AI வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் வளர்ச்சியின் உச்சபட்சமாக தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் உள்ளதால், எதிர்காலத்தில் மனித சக்தி கேள்விக்குறியாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதுதொடர்பான இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இருந்தாலும், அனைத்து தொழிற்துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகள் வந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில், சாட்ஜிபிடி , கூகுளின் ஜெமினி , பேஸ்புக்கின் மெட்டா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், ஏர்டெல் புதிய பிரட்சியாக தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், Perplexity AI சந்தாவை இலவசமாக வழங்க முன் வந்துள்ளது.
Perplexity AI நிறுவனம் சமீபத்தில், கூகுளுக்கு போட்டியாக காமட் என்ற ஏஐ தேடுபொறியை அறிமுகம் செய்தது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஏர் நிறுவனம், Perplexity AI-ஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், Perplexity AI நிறுவனம் ஏர்டெல்லுடன் இணைந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் 12 மாதத்திற்கு Perplexity Pro AI செயலியை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
பொதுவாக ஒருவர் Perplexity Pro AI பயன்படுத்த வேண்டுமானால், அதற்கான பணம் கட்ட வேண்டும். அதன்படி ஆண்டுக்கு ரூ. 17,000 கட்டணம் கட்ட வேண்டும். இந்த கட்டணத்தை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. அதாவது சுமார் 17000 ரூபாய் அளவுக்கு சுமார் 360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள், வைஃபை பயன்படுத்துபவர்கள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் என அனைவருமே அடுத்த 12 மாதத்திற்கு இலவசமாக Perplexity Pro AI வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Perplexity Pro AI என்பது பல்வேறு நவீன ஏஐ வசதிகளை வழங்க கூடியதாக இருக்கிறது. படங்களை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட பைலை அப்லோடு செய்துவிட்டு அதனை பகுப்பாய்வு செய்து வழங்க செய்வது, நம்முடைய மெயில்களை படித்து காட்டுவது, ஆய்வுகளுக்கு தரவுகளை வழங்குவது என பல சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.