இந்தியா முழுவதும் ஏர்டெல் பிராட்பேண்ட் & மொபைல் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
இன்று காலை 11 மணிக்குப் பிறகு ஏர்டெல் சேவைகள் வெகுவாக செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 3000க்கும் அதிகமான புகார்கள் எழுந்துள்ள நிலையில் மொபைல் இணையதள சேவை மற்றும் மொபைல் சிக்னல் கோளாறு உள்ளிட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த புகார் தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இருந்தபோதும் பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகு இந்த சேவைகள் சீர்செய்யப்படும் என்று ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பு அதன் வாடிக்கையாளர்களை வெகுவாக பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.