புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள், நான்கில் மூன்று பங்கு டிக்கெட் பதிவுகளுக்கான கட்டணங்களை திருப்பி செலுத்தியிருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.3200 கோடி என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‍மேலும், எஞ்சிய ஒரு பங்கு டிக்கெட்டுகள் தொடர்பான செயல்முறை நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ரூ.219 கோடி மதிப்பிலான டிக்கெட் தொகைகள், சம்பந்தப்பட்ட பயணிகளால், எதிர்கால விமானப் பயணத்திற்கான கிரெடிட் ஷெல்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திருப்பியளிக்கப்பட்ட தொகையில், மூன்றில் ஒரு பங்கு தொகை, நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோவிடமிருந்து மட்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரூ.1000 கோடி மதிப்பிலான டிக்கெட் தொகையை திருப்பியளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.