.
டில்லி
ஏர் விஸ்தாரா நிறுவன விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாக லக்னோவை சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுளார்.
ஏர் விஸ்தாரா விமான நிறுவனம் லக்னோ – டில்லி வழித்தடத்தில் இயக்கி வரும் விமானத்தில் கடந்த 24ஆம் தேதி ராஜீவ் வசந்த் தனி (வயது 62) என்னும் தொழிலதிபர் பயணம் செய்துள்ளார். புனேவைச் சேர்ந்த இவர் அந்த விமானத்தில் பணி புரிந்த விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மற்ற பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது புகார் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகாரை ஒட்டி டில்லி விமான நிலையத்தின் மூன்றாவது டெர்மினலில் அந்த விமானம் தரை இறங்கியதும் ராஜிவ் வசந்த் தனி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த போலிசாரிடம் அந்த விமானப் பெண் தன்னை அவர் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததை நேரில் தெரிவித்துள்ளார்.
அதை ஒட்டி விமான நிலைய போலிசார் தொழிலதிபர் மீது பாலியல் சீண்டல் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். அவரது குற்றம் நிருப்பிக்கப் பட்டால் அவருக்கு அதிகபட்சம் மூன்று வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.