ரஷ்ய நிலநடுக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், அலாஸ்கா, சிலி உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.

ஹவாய் தீவை சுனாமி அலைகள் நெருங்கிவருவதாகவும் இதனால் 10 அடி உயரம் வரை அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருவதால் அந்த தீவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் சுனாமி காரணமாக அங்கு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.