புது டெல்லி:
மெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் வேளையில், ஏர் இந்தியா நேற்று மாலை 5 மணி முதல் அமெரிக்காவின் நியூயார்க், நெவார்க், சிகாகோ, வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ மற்றும் கனடாவின் வான்கூவர், டொராண்டோ உள்ளிட்ட மகாணங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட சேவைக்கான முன்பதிவுகளை தொடங்கியது.

இந்நிலையில் ஏற்கனவே 1,700 டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு விட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக வரும் 8-ஆம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படுகிறது.

ஜூலை மாதம் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பாடு தொடங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத்தில், மெட்ரோ மற்றும் சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.