ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புக்கு பிறகு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க ஏர் இந்தியா விமான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

air

வழக்கமாக விமானத்தில் பயணிக்கும் பணிகளுக்கு விமானம் புறப்படும் நேரம், தாமதமாகும் நேரம், சென்றடையும் நேரம் உள்ளிட்ட அறிவிப்புக்கள் அவ்வபோது வெளியிடப்படும். அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு முறையும் அறிவிப்புகள் வெளியிட்டு முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என்ற முழகத்தை ஒலிக்கச் செய்ய அந்நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ ஏர் இந்தியாவின் ஒவ்வொரு விமானத்திலும், ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிட்டும் முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏந்தியா விமானிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிக முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தியாவின் தேசப்பக்தியை பெருமைப்படுத்தும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.