டெல்லி: 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்க மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். அதன் பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதன்படி, நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது அதை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் காணப்படும். பண்டிகை காலத்தை முன்னிட்டு வங்கிகள் மூலமாக ரூ.1. 8 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது என்று கூறினார்.