டில்லி:
சர்வதேச விமான இயக்குதலுக்கு உரிமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக மலேசியாவை சேர்ந்த ஏர் ஆசியா விமான நிறுவன சி.இ.ஓ. டோனி பெர்னாண்டஸ் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏர் ஆசியா இயக்குநர் ஆர் வெங்கட்ராமன், விமான ஆலோசகர் தீபக் தல்வார், பயண உணவு உரிமையாளர் சுனில் கபூர், சிங்கப்பூரை சேர்ந்த எஸ்என்ஆர் டிரேடிங் நிறுவன இய்குவர் ராஜேந்திர துபே உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டில்லி, மும்பை, பெங்களூரு உள்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. விதிகளுக்கு புறம்பாக உரிமம் பெற இந்திய அரசு அதிகாரிகளுடன் பெர்னாண்டஸ் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel