கோவை:  ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் வெளிவந்து மீண்டும் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை,  ‘5 கட்சி அமாவாசை’ என ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில், திமுகவுன் புகாரை தொடர்ந்து, அமைச்சரை விமர்சனம் செய்த சலூன் கடைக்காரரை காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியாளர்களையும் அரசையும் விமர்சிக்க பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்  உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், தமிழ்நாட்டில், அரசையும், அரசின் திட்டங்களில் உள்ள குறைகள், அரசின் ஊழல்கள் குறித்து  விமர்சிப்பவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அரசுக்கு , விமர்சனங்களே வரக்கூடாது என்ற வகையில்,  காவல்துறையைக்கொண்டு திமுக அரசு அரசை விமர்சிப்பவர்களை அடக்கி  ஒடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட சலூன் கடைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 471 நாட்கள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பலமுறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டன. இறுதியில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதைத்தொடர்ந்து மீண்டும் அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜி உச்சநீதிமனற் உத்தரவின்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்து உள்ளார்.

இந்த நிலையில்அமைச்சர் செந்தில் பாலாஜியை   5 கட்சி அம்மாவாசை  சலூன் கடைக்காரர் ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில்,  செந்தில் பாலாஜிமீது ற அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சலூன் கடைக்காரரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த விஸ்வேஷ்குமார் (40)  என்பவரை சாய்பாபா காலனி காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

போதைபொருட்களை கடத்துபவனையும், அதை விற்பனையும் செய்து செய்ய தைரியம் இல்லாத காவல்துறையினர்,  அரசை விமர்சிக்கும் அப்பாவி மக்களின் கழுத்தை நெரிப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.