ஐதராபாத்:

ந்தியா இன்னொரு சிரியாவாக மாறி விடும் என்று கூறிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ- இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின்தலைவர் அசாதுதின் ஓவைசி,  அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம்கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் ஒருவராக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஸ்ரீஸ்ரீரவி சங்கர் நியமனத்தக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ- இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் – ஓவைசி

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ‘அயோத்தியில் இந்துக்களின்  கோரிக்கையை முஸ்லிம்கள் மறுத்தால், இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும்  என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, வேறு  ஒரு நடுநிலை நபராக நியமித்திருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.