பெங்களூரூ:
லிம்பிக் பதக்கம் வெல்லும்  வீரரை உருவாக்குவதே எனது குறிக்கோள் என்று  இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதை இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வென்றுள்ளார்.
இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் பங்கேற்று 6.70 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்.
இவர் சொந்தமாக அகாடமி  வைத்து நடத்தி அதன் மூலம் பல வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளித்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெறச் செய்துள்ளார்.
 நாட்டின் சமூக மாற்றத்திற்கு ஓயாமல் தொடர்ந்து குரல் கொடுத்ததற்காகவும், இளம் பெண்கள் பலரை ஊக்குவித்துக் கொண்டிருப்பதாலும் இவரைக் கௌரவிக்கும் விதமாக 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது ‘THE WOMEN OF THE YEAR’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.