புவனேஸ்வர்
கொரோனா வார்டுகளில் உள்ள மருத்துவக் குப்பைகளை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை உதவியாளர் சஞ்சய் தெகுரி தனியாக அகற்றி உள்ளார்
நாடெங்கும் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சில மருத்துவமனைகளில் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க ஊழியர்கள் பயப்படுவதால் ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காகத் தனி வார்ட் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அச்சம் காரணமாக இந்த வார்டில் உள்ள மருத்துவக் குப்பைகளை அகற்ற துப்புரவுத் தொழிலாளர்கள் மறுத்து பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.
இதையொட்டி மருத்துவமனை உதவியாளர் சஞ்சய் தெகுரி என்பவர் தைரியமாகத் தாம் ஒருவர் மட்டும் தனியாக மருத்துவக் குப்பைகளை அகற்றி உள்ளார். அவருடைய இந்த செய்கை சமூக வலைத் தளங்களில் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.