சென்னை: பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமான ஏஐசிடிஇ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய கலை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர்ர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் பைனல் செமஸ்டர் மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந் நிலையில், பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான விவரத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருகிகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சம் பொறியியல் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.