டெல்லி:
நடப்பு பிரச்சினைகள் குறித்த ஆராய்வதற்கும், அது தொடர்பான கட்சியின் கருத்துக்களை வகுப்பதற்கும் 11 மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி அமைத்து உள்ளார்.
இந்த ஆலோசனை குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நாடு முழுவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்கள் சரியாக சென்றடையவில்லை. மேலும் ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில், மற்ற மாநில தொழிலாளர்கள் சிக்கி உணவுக்கு அல்லாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கொரோனாவின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போடும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கட்சியின் கருத்துக்களை வகுப்பதற்கும் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளர்.
குழு உறுப்பினர்கள் விவரம்:
1) டாக்டர் மன்மோகன் சிங் (முன்னாள் பிரதமர்)
2) ராகுல்காந்தி
3) ரன்தீப்சிங் சுர்ஜிவாலா
4) கே.சி.வேணுகோபால்
5) பி.சிதம்பரம்
6) மணிஷ் திவாரி
7) ஜெய்ராம் ரமேஷ்
8) பிரவீன் சக்ரவர்த்தி
9) கவுரவ் வல்லப்
10) சுப்ரியா ஷின்டே
11) ரோகன் குப்தா