டெல்லி: மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு நாளை டெல்லியில் விருந்து உபசாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த 18வது மக்களவைக்கான தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதையடுத்து, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யும் வகையில் நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து காங்கிரஸ் எம்.பி..ககளையும் டெல்லி வர கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறத. இதில், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்படுகிறார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு பிரமாண்டமான விருந்து வழங்கப்பட உள்ளது.
நாளை (8ந்தேதி) மாலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் விருந்து அளிக்கப்படுகின்றது.