இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் நடந்து முடிந்த மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட, சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக பணியாற்றி வெற்றி பெற்றோம். அதுபோலத்தான் உள்ளாட்சி தேர்தலில் அவர்களை முன்னிறுத்தியே வெற்று பெற்றோம். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை ஏற்கனவே நடைபெற்றுள்ள தேர்தலில் நிரூபித்துள்ளார். அதனால் அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டமனற் தேர்தலை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக சந்திக்கும், முதல்வரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த அரசு பிழைக்குமா? என கேள்வி எழுந்த சூழலில், கடந்த 3 ஆண்டுகளை கடந்தும், எடப்பாடி தலைமையிலான அரசு, நிலையான அரசாக செயல்பட்டு வருகிறது.