சென்னை: யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தான் முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசியிருந்தார். இது பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை அதிமுகத்தான் எடுக்கும் என்றவர், எந்த கட்சியுடன், எந்த கட்சிக்கு எத்தனை ,யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீட் வழங்க வேண்டும்? என்பதை அதிமுகவே தீர்மானிக்கும். எனவே, தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.