சென்னை:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் 171 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.