சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல்  தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி”  என விமர்சித்துள்ள அதிமுக,   அதிமுக ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் எல்லா Files-ம் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் 1020 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக , அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதங்களை அனுப்பியது .  இதற்கான ஆதாரங்கள் வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்துள்ளதாகவும, அந்த  ஆவணங்கள் , டிஜிட்டல் கருவிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் அடிப்படையில் இந்த புகார் கடிதங்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு  அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தி கடிதம் எழுதியது.

அமலாக்கத்துறை அனுப்பிய புகார் கடிதங்களின் அடிப்படையில் , அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார்  தொடங்காமல் காலம் தாழ்த்திய நிலையில்,   இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக தரப்பில் ராஜ்யசபா எம்பி இன்பதுரை சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி 20 அன்றைய விசாரணையின்போது,  தமிழ்நாடு அரசு சார்பில்,  அமலாக்கத்துறை கடிதம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி,, பின்னர், ”அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு  செய்ய முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்துடன், உடனே வழக்கு பதிவு செய்து விசாரிக்க  வேண்டும் என்றும்,  அமலாக்கத்துறை ஆதாரங்களில் முகாந்திரங்கள் உள்ளன அதனால் விசாரணையை உடனே துவங்க வேண்டும்  என்றும், சுதந்திரமாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு மீதான ₹ 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ED அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதில், 51-வது பக்கத்தில் டெண்டர்களுக்கான 7.5% -10% வரையிலான கமிஷன்(Party Fund) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை FIR பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.

அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை   அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அஇஅதிமுக சார்பில்   தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை ,   தமிழக “பொறுப்பு” டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், “டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், “Party Fund” (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்! “தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?

செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்! இன்னும் இரண்டே மாதங்கள் தான்…

அதிமுக  ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!

இவ்வாறு கூறி உள்ளது.

ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

[youtube-feed feed=1]