சென்னை:

திமுக அமைச்சர் பாஸ்கரன், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து, பாஜக அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள என்ஆர்சி, சிஏஏ போன்ற சட்டங்களுக்கு தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ள நிலையில், இந்த சட்டங்களால் தமிழக மக்களுக்குஎந்தவித பாதிப்பு ஏற்பட விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் பாஸ்கரன்,“ குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது,  தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர், இதன் காரணமாக,  பாஜக கூட்டணியிலிருந்து  அதிமுக பிரியவதற்கு தோதான நேரம் பார்த்துக்கொண்டிருப்பாக கூறினார்.

இது, அதிமுக பாஜக இடையே நடைபெற்று வரும் மோதல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதற்கு அதிமுக தலைமை சரியான முறையில் பதில் தெரிவிக்காத நிலையில், அமைச்சரின் கருத்து அவரது சொந்த கருத்து என்று கூறியது.

ஆனால், பாஜகவினர்  அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்து வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ்,  “2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்; மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்”  என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்றுவர்,  திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக்கொடுப்பாரா? என கேள்வி எழுப்பினார்.